இலங்கை, பாகிஸ்தான் நாடுகளைப் போல் இல்லாமல் இந்தியாவில் போதுமான அந்நியச் செலாவணி கையிருப்பு உள்ளது - ரகுராம் ராஜன்
இலங்கை, பாகிஸ்தான் நாடுகளைப் போல் இல்லாமல் இந்தியாவில் போதுமான அந்நியச் செலாவணி கையிருப்பு உள்ளதாக ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.
சத்தீஸ்கரின் ராய்ப்பூரில் பேசிய அவர், நாட்டின் அந்நியச் செலாவணிக் கையிருப்பை ரிசர்வ் வங்கி உயர்த்தி வருவதாகவும், வெளிநாட்டுக் கடன்கள் குறைவாக உள்ளதாகவும் தெரிவித்தார்.
உலக நாடுகள் அனைத்திலும் பணவீக்கம் உள்ளதாகவும், ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தியதால் இந்தியாவில் பணவீக்கம் குறைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
உணவுப் பொருள், எரிபொருள் விலை உயர்வால்தான் பணவீக்கம் ஏற்பட்டுள்ளதாகவும், உலக நாடுகளில் பணவீக்கம் குறையும்போது இந்தியாவிலும் குறைந்துவிடும் என்றும் ரகுராம் ராஜன் தெரிவித்தார்.
Comments