மக்களுக்கு என்ன தேவை என்பதை யோசித்து பிரதமர் உழைக்கிறார் - நிர்மலா சீதாராமன்
முன்னேற்றம் அடைந்த பல நாடுகளின் பொருளாதாரம் கூட இன்று பின்தங்கிய நிலைக்கு செல்லும் சூழலில், உலகளவில் அதிக வளர்ச்சி அடைந்து வரும் நாடாக இந்தியா திகழ்வதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய அவர், பிரதமர் மோடியின் ஆட்சியில் ஜனநாயகம், கருத்து சுதந்திரம் வலுவாகியுள்ளதா கூறினார்.
மேலும், கொரோனா தொற்று சவாலை எதிர்கொண்ட போதிலும், வலுவான பொருளாதாரத்தை கொண்ட நாடாக இந்தியா உள்ளதாக நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டார்.
Comments