இந்தியாவில் குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்ட முதல் நபர் குணமடைந்தார்

0 16357

இந்தியாவில் முதன்முறையாக குரங்கு அம்மை நோய் பாதிப்பு கண்டறியப்பட்ட நபர் குணமடைந்ததாக கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரளா வந்த 35 வயது நபருக்கு கடந்த 14 ஆம் தேதி அந்நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. திருவனந்தபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், தொற்றில் இருந்து அவர் முழுமையாக குணமடைந்ததையடுத்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாக அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments