எலியைக் கொல்ல நஞ்சு தடவி வைத்த தக்காளியை நூடுல்சுடன் சேர்த்துத் தின்ற மும்பை பெண் உயிரிழப்பு

0 2819

எலியைக் கொல்லத் தக்காளியில் நஞ்சு தடவியதை மறந்த பெண், அதை மேகி நூடுல்சுடன் சேர்த்துத் தானே தின்றதால் பலியான சோகம் மும்பையில் நேர்ந்துள்ளது.

ரேகா நிசாத் என்கிற பெண் வீட்டில் மேகி நூடுல்ஸ் தின்ற சில மணி நேரத்தில் வயிறு குமட்டியதால் கக்கியுள்ளார். அவர் கணவர் அவரை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்துள்ளார். ஐந்து நாட்களாகச் சிகிச்சை அளித்தும் பயனளிக்காமல் புதனன்று அவர் உயிரிழந்தார்.

இது குறித்துக் காவல்துறை விசாரித்ததில், வீட்டில் எலியைக் கொல்லத் தக்காளிப் பழங்களில் நஞ்சு தடவி வைத்திருந்த நிலையில், தொலைக்காட்சி பார்த்துக்கொண்டே மேகியைத் தின்ற அந்தப் பெண் தற்செயலாகத் தக்காளியையும் சேர்த்துத் தின்றதாகவும், இதனால் உயிரிழந்ததாகவும் தெரியவந்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments