அமெரிக்க இந்தியருடன் கன்னியாகுமரி பெண் வீடியோ கான்பரன்சிங் மூலம் திருமணம் செய்து கொள்ள உயர்நீதிமன்ற கிளை அனுமதி!
அமெரிக்க குடியுரிமை பெற்று, அமெரிக்காவில் பணியாற்றும் இந்தியாவைச் சேர்ந்த இளைஞரும், கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த பெண்ணும் வீடியோ கான்பரன்சிங் மூலம் திருமணம் செய்து கொள்வதற்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை அனுமதி அளித்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த வம்சி சுதர்ஷினி தாக்கல் செய்திருந்த மனுவில் 30 நாட்களுக்குப் பிறகும் திருமண விண்ணப்பத்தின் மீது சார்பதிவாளர் நடவடிக்கை எடுக்காத நிலையில், விடுமுறை இல்லாததால் ராகுல் அமெரிக்கா சென்றுவிட்டதாகவும் தெரிவித்திருந்தார்.
வீடியோ கான்பரன்சிங் மூலம் திருமணம் செய்துகொள்ள அனுமதிக்க வேண்டும் என்ற அவரது கோரிக்கைக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அனுமதி அளித்துள்ளார்.
3 சாட்சிகள் முன்னிலையில் திருமணத்தை நடத்தவும், அதன்பிறகு திருமண பதிவு சான்றிதழை மணவளக்குறிச்சி சார்பதிவாளர் வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.
Comments