சிங்கப்பூரிலிருந்து புதுக்கோட்டை வந்தவருக்கு குரங்கம்மை அறிகுறி.. சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதி!
சிங்கப்பூரிலிருந்து வந்த நபர் குரங்கம்மை அறிகுறிகளுடன் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
அரிமளம் அருகேயுள்ள கிராமத்தைச் சேர்ந்த அவர் 2 நாட்களுக்கு முன்பு சிங்கப்பூரிலிருந்து திருச்சி விமான நிலையம் வந்தபோது, அவருக்கு குரங்கம்மை அறிகுறி இருப்பது தெரியவந்தது.
இந்தநிலையில் கன்னியாகுமரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 4 பேருக்கு சாதாரண அம்மைக்கான அறிகுறிகளே இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
எனினும், புனே ஆய்வகத்துக்கு மாதிரிகள் அனுப்பப்பட்டுள்ள நிலையில் இறுதி முடிவுகள் நாளையே தெரியவரும். இச்சூழ்நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் குரங்கம்மை குறித்து தேவையில்லாமல் அச்சத்தை ஏற்படுத்த வேண்டாம் என்றார்.
Comments