துப்பாக்கி சுடும் போட்டியில் 4 தங்கம், 2 வெண்கலம் - பதக்கங்களை அள்ளிய நடிகர் அஜித்குமார்..!

0 2217

திருச்சியில் நடைபெறும் மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் நடிகர் அஜித்குமார் 4 தங்கம் மற்றும் 2 வெண்கல பதக்கங்களை வென்றார்.

திருச்சி கே.கே. நகர் ஆயுதப்படை வளாகத்தில், 47வது மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி கடந்த 25ஆம் தேதி முதல் நடைபெற்றது.

இதில் 1300 போட்டியாளர்கள் பங்கேற்ற நிலையில், கடந்த 27ஆம் தேதி பல்வேறு பிரிவுகளில் நடிகர் அஜித்குமாரும் பங்கேற்றார்.

அதில் அவர் சென்டர் பயர் pistal மாஸ்டர் ஆண்கள் அணி பிரிவில் தங்கப்பதக்கம், 50 மீட்டர் பிரீ பிஸ்டல் மாஸ்டர் ஆண்கள் அணி பிரிவில் தங்கப் பதக்கம், 2 வெண்கல பதக்கம் என 6 பதக்கங்களை வென்றுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments