நான்கு நாட்களில் ஒன்றரை லட்சம் கோடி ரூபாயை நெருங்கும் 5ஜி அலைக்கற்றை ஏலம்..!
5ஜி அலைக்கற்றை ஏலம் நான்கு நாட்களில் ஒன்றரை லட்சம் கோடி ரூபாயை நெருங்கியுள்ளது.
இதுவரை 23 சுற்றுகளாக ஏலம் நடைபெற்றுள்ள நிலையில், மொத்த அலைகற்றையில் இதுவரை 71 சதவிகிதம் விற்பனை ஆகியுள்ளதாக மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
ரிலையன்ஸ், அதானி, ஏர்டெல், வோடோபோன் நிறுவனங்கள் ஏலத்தில் பங்கேற்றுள்ள நிலையில் இதுவரை ஒரு லட்சத்து 49 ஆயிரத்து 855 கோடி ரூபாய்க்கு ஏலம் கேட்கப்பட்டுள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை ஏலம் தொடங்கிய நிலையில், ஐந்தாவது நாளான இன்றும் தொடர்கிறது.
Comments