ரயில்வேயில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.2.7 கோடி மோசடி.. பெண் உட்பட 3 பேர் கைது!

0 4861

கரூரில் ரயில்வே துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி 45 நபர்களிடம் 2 கோடி ரூபாய் பணத்தை மோசடி செய்த  பெண் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

தாந்தோன்றிமலை கருப்பண்ணன், ரமேஷ், ரங்கநாதன் மற்றும் மதுரையைச் சேர்ந்த ஆனந்தி ஆகியோர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 45 பேரிடம் 2கோடியே 7 லட்சம் ரூபாய் பெற்றுக் கொண்டு ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாக கூறியுள்ளனர். 

ஆனால் சொன்னபடி அவர்கள் யாருக்கும் வேலை வாங்கி கொடுக்கவில்லை. இதற்கிடையில் ரங்கநாதன் கொரோனாவால் உயிரிழந்தார்.

இதனை அடுத்து பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் பேரில் தீவிர விசாரணை மேற்கொண்ட போலீசார் ஆனந்தி, உள்பட 3 பேரை கைது செய்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments