நாடு முழுவதும் நீதிமன்றங்களில் 5 கோடி வழக்குகள் நிலுவை - மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தகவல்
நாட்டின் பல்வேறு நீதிமன்றங்களில் சுமார் 5 கோடி வழக்குகள் நிலுவையில் இருப்பதாக மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜூ மக்களவையில் தெரிவித்துள்ளார்.
உறுப்பினர்களின் கேள்விக்கு அவர் எழுத்துப் பூர்வமான விளக்கம் அளித்தார். அதன்படி உச்சநீதிமன்றத்தில் 72 ஆயிரம் வழக்குகளும், 25 உயர்நீதிமன்றங்களில் ஒரு கோடியே 60 லட்சம் வழக்குகளும், இதர வழக்குகள் மாவட்ட நீதிமன்றங்களிலும் நிலுவையில் இருப்பதாகத் தெரிவித்தார்.
நீதிபதிகளின் காலிப் பணியிடங்கள் வாய்தாக்கள், வழக்குளைக் கண்காணிக்கவும் பின்தொடரவும் வாய்ப்பில்லாத சூழல் என்று பல்வேறு காரணங்களால் வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
Comments