சென்னையில் பராமரிக்கப்படாமல் உள்ள 70 சதவீதத்துக்கும் அதிகமான கழிப்பறைகள்
சென்னை மாநகராட்சியில் 70 சதவீதத்திற்கும் மேற்பட்ட கழிப்பறைகள் பராமரிக்கப்படாமல் இருப்பதால், அதனை பயன்படுத்த முடியவில்லை என்று பொதுமக்கள் புகார் கூறியுள்ளனர்.
சென்னை முழுவதும் 816 இடங்களில் இலவச கழிப்பிடங்கள், கட்டணக் கழிப்பிடங்கள் என 6000க்கும் மேற்பட்ட கழிப்பிடங்கள் உள்ளன. மேலும், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ஆயிரத்துக்கும் கழிப்பிடங்கள் இருக்கின்றன.
இந்த கழிப்பறைகளுடன் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல்முறையாக தொடங்கப்பட்ட இ-டாய்லெட் என்று சொல்லக் கூடிய நவீன கழிப்பிடங்களும் கடந்த 5 ஆண்டுகளாக பராமரிப்பின்றி துர்நாற்றம் வீசுவதாக பொதுமக்கள் கூறியுள்ளனர்.
Comments