"8 கோடி தமிழக மக்களுக்கு 23,000 மருத்துவர்களே உள்ளனர்" - போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர் பேட்டி
சுவிஸ் நேசனல் வங்கிக்கு முதல் அரையாண்டில் 10,008 கோடி டாலர் நட்டம்..!
சுவிட்சர்லாந்தின் மைய வங்கியான சுவிஸ் நேசனல் வங்கி முதல் அரையாண்டில் 9520 கோடி சுவிஸ் பிராங்க் நட்டம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
இது அமெரிக்க மதிப்பில் பத்தாயிரம் கோடி டாலராகும். இரண்டாவது காலாண்டில் மட்டும் 6240 கோடி சுவிஸ் பிராங்க் இழப்பு ஏற்பட்டுள்ளது. 1907ஆம் ஆண்டுக்குப் பின் அந்த வங்கிக்கு ஏற்பட்ட மிகப்பெரிய இழப்பாக இது கருதப்படுகிறது.
கையிருப்பில் உள்ள பங்குகள், கடன் பத்திரங்கள், அந்நியச் செலாவணி ஆகியவற்றின் மதிப்புக் குறைந்ததால் ஏற்பட்ட இந்த இழப்பு தங்கள் பணக்கொள்கையில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்றும் சுவிஸ் நேசனல் வங்கி தெரிவித்துள்ளது.
Comments