பாதியாகக் குறைந்த ஆசியாவின் பணக்கார பெண்மணியின் சொத்து மதிப்பு... ஆனாலும் 'யாங் ஹுய்யன்' தொடர்ந்து முதலிடம்

0 2713

சீனாவில் ரியல் எஸ்டேட் வர்த்தகம் கடும் வீழ்ச்சி அடைந்ததன் எதிரொலியாக ஆசியாவின் பணக்கார பெண்மணியான யாங் ஹுய்யனின் (Yang Huiyan) சொத்து மதிப்பு பாதியாக குறைந்துள்ளது.

வீடு விற்பனையில் சரிவு, குறிப்பிட்ட காலவரையறைக்குள் கட்டுமானம் நிறைவு பெறாத வீடுகளின் உரிமையாளர்கள் தவணை செலுத்த மறுப்பது போன்ற காரணங்களால் அந்நாட்டின் மிகப்பெரும் கட்டுமான நிறுவனங்களுள் ஒன்றான Country Garden Holdings-ன் பங்கு மதிப்பு கடுமையாக சரிந்தது.

இதனால், அந்நிறுவனத்தின் உரிமையாளரான யாங் ஹுய்யனின் (Yang Huiyan) சொத்து மதிப்பு ஒரு லட்சத்து 91,000 கோடி ரூபாயில் இருந்து சுமார் 87,000 கோடி ரூபாயாக குறைந்தது. சொத்து மதிப்பு பாதிக்கும் கீழ் குறைந்த போதும் அவர் இன்னும் ஆசியாவின் பணக்காரப் பெண்மணியாகத் திகழ்கிறார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments