பள்ளி வளாகத்தில் தரையில் உருண்டு ஆவேசமாக கதறி அழுத பள்ளி மாணவிகள்..!
மாஸ் ஹிஸ்டீரியா எனப்படும் மன அழுத்த நோயால் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் பள்ளி மாணவிகள் சிலர், தலைவிரி கோலமாக தரையில் உருண்டு கத்திக் கூச்சலிட்டவாறு கதறி அழுத வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. உத்தரகண்ட் மாநிலம் பாகேஷ்வரில் உள்ள அரசுப்பள்ளியில் கடந்த 2 நாட்களாக மாணவிகள் இவ்வாறு வினோதமாக நடந்துக் கொள்வதாக சொல்லப்படுகிறது.
மாஸ் ஹிஸ்டீரியா என்பது மன அழுத்தத்தால் உண்டாகும் நோயாகும். இந்த நோயால் பாதிக்கப்படுவோர், கோபமாகவோ, பயங்கர அழுகையின் மூலமாகவோ தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்துவர்.
அப்போது, அசாதாரணமான முறையில் நடந்துக் கொண்டு தங்களது உணர்ச்சிகளை வெளிப்படுத்துவார்கள் என்று மனநல நிபுணர்கள் கூறுகின்றனர்.
Comments