லடாக் எல்லையில் இந்திய ராணுவத்தின் பயன்பாட்டிற்காக புதிய கவச வாகனங்கள்
லடாக் எல்லையில் சீன படைகளின் அத்துமீறல்களை முறியடிக்க ஏதுவாக இந்திய ராணுவத்தினருக்கு மலைப்பகுதிகளில் வேகமாகப் செல்லக்கூடிய கவச வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
Infantry Protected Mobility Vehicle என்றழைக்கப்படும் இந்த கவச வாகனத்தை 16,000 அடி உயரத்தில் உள்ள கரடு முரடான மலைப்பாதையில் கூட மணிக்கு 80 கிலோமீட்டர் வேகத்தில் செலுத்த முடியும்.
மேல்புறத்தில் தானியங்கி துப்பாக்கியுடன், டாடா நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த வாகனத்தில் 12 ராணுவ வீரர்கள் வரை உள்ளே இருந்தபடியே தாக்குதல் நிகழ்த்த முடியும். ரோந்து பணிகளைத் துரிதப்படுத்தவும், தாக்குதல் பகுதிகளுக்கு வீரர்களை வேகமாக அழைத்து செல்லவும் இந்த வாகனங்கள் பயன்படுத்தப்ட உள்ளன.
Comments