காங்கிரஸ் எம்.பி.ஆதிர் ரஞ்சன் சவுத்ரிக்கு தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ்
குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை விமர்சித்த காங்கிரஸ் எம்.பி.ஆதிர் ரஞ்சன் சவுத்ரிக்கு தேசிய மகளிர் ஆணைய தலைவர் ரேகா சர்மா நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
இதுதொடர்பான விசாரணை ஆகஸ்ட் 3ஆம் தேதி நடைபெற உள்ளதாகவும், இந்த விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி எழுத்துப்பூர்வமாக மன்னிப்பு கேட்டு, ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
இதனிடையே, ஆதிர் ரஞ்சன் சவுத்ரிக்கு எதிராக மத்திய பிரதேசத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Comments