ஆர்பிதா முகர்ஜியின் இல்லத்தில் அமலாக்கத்துறையினர் விசாரணை.!
கொல்கத்தாவில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டு 29 கோடி ரூபாய் ரொக்கப்பணத்தைக் கைப்பற்றிய ஆர்பிதா முகர்ஜியின் ராயல் ரெசிடென்சி குடியிருப்பில் மீண்டும் அமலாக்கத்துறையினர் நேற்றிரவு சோதனையில் ஈடுபட்டனர்.
அங்கு விசாரணை நடத்தியதில், பணம் கொட்டி வைக்கப்பட்ட அந்த அறையை ஆர்பிதா மூடியே வைத்திருப்பார் என்றும் யாரையும் அதன் அருகில் செல்ல அனுமதிக்க மாட்டார் என்றும் அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர்.
இதனிடையே அமைச்சர் பொறுப்பில் இருந்து பார்த்தா சட்டர்ஜியை நீக்கிய முதலமைச்சர் மம்தா பானர்ஜி, நேற்று அவரை அடிப்படை கட்சி உறுப்பினர் பதவியில் இருந்தும் நீக்குவதாக அறிவித்துள்ளார்
Comments