கொரோனா ஊரடங்கு காலத்தில் வீட்டிலேயே குட்டி விமானம் செய்து குடும்பத்துடன் பறந்த கேரள இளைஞர்
கொரோனா ஊரடங்கில் குடும்பதிற்கென பிரத்யேகமாக சிறிய ரக விமானம் ஒன்றை தயாரித்து, லண்டனில் வசிக்கும் இந்திய வம்சாவளி இளைஞர் ஒருவர் அசத்தியுள்ளார்.
கேரளா மாநிலம் ஆலப்புழாவைச் சேர்ந்த மெக்கானிக்கல் இன்ஜினியரான அசோக் தமரக் ஷன், மனைவி மற்றும் இரு மகள்களுடன் லண்டனில் வசித்து வருகிறார். ஊரடங்கின் போது 1 லட்சத்து 40 ஆயிரம் யூரோ செலவில் நான்கு பேர் அமர்ந்து பயணிக்ககூடிய வகையில் விமானம் ஒன்றை தயாரித்துள்ளார்.
பல்வேறு கட்ட தரப்பரிசோதனைகளுக்கு பிறகு முறையான அனுமதி கிடைத்ததும் விமானத்தில் மனைவி, மகள்களுடன் தற்போது ஐரோப்பாவில் உற்சாகமாக வலம் வருகிறார்.
Comments