குஜராத் செல்லும் ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு.. பயணிகளின் திக் திக் நிமிடங்கள்.!
மும்பை விமான நிலையத்தில் இருந்து குஜராத்தின் காண்ட்லா செல்லும் ஸ்பைஸ் ஜெட் விமானம் ஒன்று ஓடுபாதையில் புறப்பட்டுச் சென்று பறக்கத் தொடங்கி பின்னர் தொழில்நுட்பக் கோளாறு என எச்சரிக்கை விளக்குகள் மின்னியதால் மீண்டும் விமான நிலையத்திற்குத் திரும்பியது.
கடந்த 40 நாட்களில் 9வது முறையாக இதுபோன்ற நிகழ்வு நடந்துள்ளது.ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் பயணிகளின் பாதுகாப்புக்காக தனது விமானங்களின் எண்ணிக்கையை பாதியாக குறைக்க விமானப் போக்குவரத்து இயக்குனரகம் உத்தரவிட்டுள்ள நிலையில் நேற்று மீண்டும் பயணிகள் உயிர்களுக்கு நேர இருந்த ஆபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.
Comments