சீனாவின் பெரும்பணக்காரர் ஜேக் மா ஆன்ட் குழுமத்தை விட்டுக்கொடுப்பதாகத் தகவல்
சீனாவின் பெரும்பணக்காரர் ஜேக் மா ஆன்ட் குழுமத்தின் கட்டுப்பாட்டை விட்டுக்கொடுக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அலிபாபா நிறுவனத்தின் துணை நிறுவனமான ஆன்ட் குழுமத்தில் ஜேக் மாவுக்கு 10 விழுக்காடு பங்குகள் உள்ளன. 2020ஆம் ஆண்டின் இறுதியில் பங்கு வெளியீடு மூலம் ஆண்ட் குழுமத்துக்கு 3700 கோடி டாலர் நிதி திரட்ட இருந்த முயற்சி சீன அரசால் தடுத்து நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் ஆன்ட் குழுமத்தில் உள்ள தனது பங்குகளைத் திரும்பப் பெறவும், அதன் கட்டுப்பாட்டை விட்டுக்கொடுக்கவும் ஜேக் மா திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
Comments