சீனா ஏவிய ராக்கெட்டின் சிதைவுகள் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் விழக் கூடும் எனத் தகவல்!
சீனா அண்மையில் ஏவிய பூஸ்டர் ராக்கெட்டின் சிதைவுகள் அடுத்த சில நாட்களில் புவியின் பல பகுதிகளில் விழக்கூடும் என விண்வெளி நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.
சீனா ஜூலை 24ஆம் நாள் லாங்மார்ச் 5பி என்னும் ராக்கெட் மூலம் விண்வெளி ஓடத்தைச் சுற்றுப்பாதையில் செலுத்தியது.
23 டன் எடை கொண்ட பூஸ்டர் ராக்கெட் விண்வெளி முகமையின் கட்டுப்பாட்டை இழந்துள்ள நிலையில், ஜூலை 31ஆம் நாள் வாக்கில் இதன் சிதைவுகள் அமெரிக்கா, ஆப்பிரிக்கா, பிரேசில், இந்தியா மற்றும் தென்கிழக்காசிய நாடுகளில் மக்கள் வாழும் பகுதிகளில் விழக்கூடும் என ஏரோஸ்பேஸ் என்கிற விண்வெளிக் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
இதை மறுத்துள்ள சீன அரசின் ஊடகம், விண்வெளித் துறையில் சீனாவின் எழுச்சியை விரும்பாதவர்கள் இவ்வாறு கதைகட்டுவதாகத் கூறியுள்ளது.
Comments