"8 கோடி தமிழக மக்களுக்கு 23,000 மருத்துவர்களே உள்ளனர்" - போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர் பேட்டி
17 வயது நிரம்பியவர்கள் வாக்காளர் அட்டைக்கு விண்ணப்பிக்கலாம்.. தேர்தல் ஆணையம் அறிவிப்பு!
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஆண்டுக்கு நான்கு முறை வாய்ப்பளிக்கப்படும் என்றும், 17 வயதுக்கு மேற்பட்டோர் முன்கூட்டியே விண்ணப்பிக்கலாம் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
வாக்காளர் பட்டியலில் புதிதாகப் பெயர் சேர்க்க ஜனவரி முதல் நாளில் 18 வயது நிரம்பியிருக்க வேண்டும் என விதிமுறை இருந்தது.
இனி ஜனவரி 1 மட்டுமல்லாமல் ஏப்ரல் 1, ஜூலை 1, அக்டோபர் 1 ஆகிய நாட்களையும் தகுதி நாளாகக் கொண்டு ஆண்டுக்கு நான்கு முறை பெயர் சேர்க்கப்படும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
அதன்படி 17 வயதுக்கு மேற்பட்டோர் முன்கூட்டியே விண்ணப்பித்தால் 18 வயது நிரம்பும்போது தானாகவே வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
வாக்காளர் பதிவுக்கான எளிமையான புதிய படிவங்கள் ஆகஸ்டு முதல் நடைமுறைக்கு வருவதாகவும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
Comments