இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் வருகிறது கூகுள் ஸ்டீரீட் வியூ அம்சம்..!
பாதுகாப்பு காரணமாக தடை செய்யப்பட்ட கூகுள் ஸ்ட்ரீட் வியூ (Street View) அம்சம் 10 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இந்தியாவில் அறிமுகமாக உள்ளது.
நகரங்களின் உள்கட்டமைப்புகளை இருந்த இடத்திலேயே கூகுள் மேப்ஸ் செயலியின் ஸ்ட்ரிட் வியூ அம்சம் மூலம் வீதிக் காட்சியாக பார்க்கலாம். கூகுள் ஸ்ட்ரீட் வியூ அம்சத்தால் போதிய பாதுகாப்பு வசதிகள் இல்லை என இந்திய அரசு நிராகரித்தது.
இந்நிலையயில் நாட்டின் 10 இடங்களில் மீண்டும் இந்த வசதியை கொண்டு வர உள்ளதாகவும், ஆண்டு இறுதிக்குள் 50 நகரங்களில் கூகுள் ஸ்ட்ரீட் வியூ அம்சத்தை கொண்டு வர திட்டமிட்டு உள்ளதாகவும் கூகுள் தெரிவித்துள்ளது.
Comments