திமுக பிரமுகர் கொலை.. கைகால்களை கட்டி சடலம் கிணற்றில் வீச்சு..! குழந்தை பிறந்த நிலையில் சம்பவம்

0 5361

மதுரை அடுத்த திருமங்கலம் அருகே திமுக பிரமுகரை கொலை செய்து, கைகால்களை கட்டி கிணற்றில் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த டி.கல்லுப்பட்டி அருகே உள்ள எம்.சுப்புலாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலாஜி. திமுக பிரமுகரான இவர் எல் எல் பி பட்டப்படிப்பு படித்து வந்தார். இவரது மனைவி தர்ஷினி இவர்களுக்கு திருமணமாகி 1½ ஆண்டுகள் ஆகிறது. மனைவிக்கு குழந்தை பிறந்து இரண்டு மாதங்கள் ஆகிறது.

குழந்தை பிறந்துள்ளதால் தர்ஷினி கோவில்பட்டியில் உள்ள தனது தாயின் வீட்டில் வசித்து வருகிறார். கடந்த 24 ஆம் தேதி வீட்டை விட்டு வெளியில் சென்ற பாலாஜி வீடு திரும்பவில்லை அதனால் அவரது பெற்றோர்கள் மனைவியை பார்க்க சென்று இருக்கலாம் என நினைத்து அமைதியாக இருந்துள்ளனர்.

இந்த நிலையில் எம். சுப்புலாபுரம் அருகே சிட்டுலொட்டிபட்டி பகுதியில் சாமிராஜ் என்பவரது விவசாய கிணற்றில் ஆண் சடலம் ஒன்று மிதப்பதாக காடனேரி கிராம நிர்வாக அலுவலர் பாலமுருகன் போலீசாருக்கு தகவல் அளித்தார்.

தகவல் அறிந்து வந்த பேரையூர் போலீசார் சம்பவ இடத்தில் வந்து கிணற்றில் கிடந்த ஆண் பிணத்தை தீயணைப்புத் துறையினர் உதவியுடன் மீட்டனர். கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் உடம்பு முழுவதும் சாக்கை வைத்து போர்த்தி இருந்தது.

சாக்கை அகற்றி பார்த்த போது உடல் அழுகிய நிலையில் இருந்தது இதையடுத்து இறந்த ஆண் பிணம் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டை விட்டு சென்ற திமுக பிரமுகர் பாலாஜி என்பது தெரியவந்தது.

இதனை அடுத்து பாலாஜியின் குடும்பத்தினருக்கு தகவல் அளித்த போலீசார் இறந்த பாலாஜியின்சடலத்தை கைப்பற்றி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும்., வாலிபர் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் பிணமாக கிடந்ததால் கொலை வழக்காக பதிவு செய்த., வாலிபரை கொலை செய்து கிணற்றில் வீசி சென்றது யார்? எதற்காக கொலை செய்தனர்? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments