மூத்த குடிமக்களுக்கு ரயில் பயணத்தில் கட்டணச் சலுகை வழங்குவது பற்றி ரயில்வே வாரியம் பரிசீலித்து வருவதாகத் தகவல்
மூத்த குடிமக்களுக்கு ரயில் பயணத்தில் கட்டணச் சலுகை வழங்குவது பற்றி ரயில்வே வாரியம் பரிசீலித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
58 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கும், 60 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கும் வழங்கப்பட்டு வந்த ரயில் கட்டணச் சலுகை கொரோனா சூழலில் நீக்கப்பட்டது. இதை மீண்டும் கொண்டுவரும் எண்ணமில்லை என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இரு பாலாருக்கும் வயது வரம்பை 70 ஆக உயர்த்திக் கட்டணச் சலுகையைக் கொண்டுவரவும், குளிர்வசதி இல்லாத வகுப்புகளில் மட்டும் சலுகை வழங்கவும் ரயில்வே வாரியம் பரிசீலித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
Comments