செஸ் வீரர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் அங்குள்ள சுற்றுலாத் தலங்களை பார்க்க ஏதுவாக, சுற்றுலா நட்பு வாகன சவாரி அறிமுகம்.!
மாமல்லபுரத்தில் செஸ் வீரர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் அங்குள்ள சுற்றுலாத் தலங்களை பார்க்க ஏதுவாக, சுற்றுலா நட்பு வாகன சவாரி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
குறைவான கட்டணத்தில் சுற்றிப்பார்க்கும் வகையில் இதற்காக 25 ஆட்டோ ஓட்டுநர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், மத்திய கைலாஷில் இருந்து மாமல்லபுரம் வரை சுற்றுலாத்துறை சார்பில் 5 இலவச பேருந்து சேவையும் தொடங்கப்பட்டுள்ளது. இதனை சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் தொடங்கிவைத்தார்.
Comments