சோனியா காந்தியிடம் 2-வது நாளாக 3 மணி நேரம் அமலாக்கத்துறை விசாரணை
காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியிடம், தொடர்ந்து 2வது நாளாக அமலாக்கத்துறையினர் 3 மணி நேரம் விசாரணை நடத்தினர்.
நேஷனல் ஹெரால்டு நாளிதழ் பணப்பரிவர்த்தனைகள் தொடர்பாக, நேற்று சோனியா காந்தியிடம் 6 மணி நேரம் விசாரணை நடைபெற்ற நிலையில் அவர் 75 கேள்விகளுக்கு பதில் அளித்ததாக தகவல் வெளியானது.
இரு நாட்கள் விசாரணை முடிவடைந்த நிலையில் சோனியாவுக்கு வேறு சம்மன் ஏதும் அனுப்பப்படாது என அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Comments