திருமண விருப்பத்தை நிராகரித்த மாணவியை குத்திக்கொலை செய்த சக மாணவருக்கு தூக்கு தண்டனை விதித்த எகிப்து நீதிமன்றம்.!

0 3195

எகிப்தில், திருமண விருப்பத்தை நிராகரித்த பல்கலைக் கழக மாணவியை கொலை செய்த நபரை, தூக்கிலிடும் காட்சியை தொலைக்காட்சியில் நேரலையாக ஒளிபரப்ப வேண்டுமென நீதிபதி தெரிவித்துள்ளார்.

மன்செளரா பல்கலைக்கழகத்தில் பயின்ற சக மாணவியை கொலை செய்த மாணவருக்கு, கடந்த ஜூன் 28-ம் தேதி மரண தண்டனை விதித்த எகிப்து நீதிமன்றம், தண்டனை நிறைவேற்றப்படுவதை தொலைக்காட்சியில் நேரலையாக ஒளிபரப்ப வசதியாக சட்டத்திருத்தம் மேற்கொள்ள வேண்டுமென தற்போது நாடாளுமன்றத்துக்கு கடிதம் எழுதியுள்ளது.

இதன்மூலம் வருங்காலத்தில் இதுபோன்ற குற்றங்கள் நடைபெறுவதை தடுக்க முடியும் என நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments