செஸ் ஒலிம்பியாட் இடங்களில் பிரதமர் படம் இடம்பெற வேண்டும் - தமிழிசை சௌந்தரராஜன்

0 2725

மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெறும் இடங்களில் நாட்டின் அடையாளமான பிரதமர் நரேந்திர மோடியின் படம் இடம்பெறாதது வருத்தத்தை ஏற்படுத்துகிறது என்றும், இதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் வலியுறுத்தியுள்ளார்.

75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, புதுச்சேரி கடற்கரையில் அமைக்கப்பட்டு வரும் தியாகச்சுவரில் சுதந்திரப்போராட்ட வீராங்கனை வேலு நாச்சியாரின் பெயர்பலகையை இன்று ஆளுநர் தமிழிசை பதித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசி அவர், மாமல்லபுரத்தில் தேசிய உணர்வோடு நடத்தப்படும் செஸ் ஒலிம்பியாட் இடங்கள் அனைத்திலும் பிரதமர் மோடியின் படம் இடம்பெற செய்யவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments