ஆகஸ்ட் 1 முதல் அனைத்து படப்பிடிப்புகளையும் நிறுத்துவதாக தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர்கள் அறிவிப்பு!
கொரோனாவுக்கு பிந்தைய காலத்தில் திரைப்பட தயாரிப்புக்கான செலவினங்கள் அதிகரித்துள்ளதாலும், RRR, KGF-2 உள்ளிட்ட சில படங்களை தவிர பிற படங்கள் தோல்வியை தழுவியதாலும், திரைப்பட தயாரிப்பு தொழிலை மறுசீரமைப்பு செய்வதற்காக ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதல் அனைத்து படப்பிடிப்புகளையும் நிறுத்துவதாக தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர்கள் கில்டு அறிவித்துள்ளது.
திரைப்படங்களுக்கான பட்ஜெட், ஒடிடி மற்றும் திரையரங்குகளில் படங்களை வெளியிடுவது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டு, படப்பிடிப்புகளை மீண்டும் தொடங்குவது குறித்து முடிவெடுக்கப்படும் என தயாரிப்பாளர் கில்ட் அறிவித்துள்ளது.
Comments