5ஜி அலைக்கற்றை முதல்நாள் ஏலத்தொகை ஒரு லட்சத்து 45 ஆயிரம் கோடியைத் தாண்டியது
இந்தியாவின் முதல் 5ஜி அலைக்கற்றை ஏலத்திற்கான 4வது சுற்று ஏலத்தொகை முதல் நாளில் ஒரு லட்சத்து 45 ஆயிரம் கோடி ரூபாயைத் தாண்டியதாக தொலைத்தொடர்பு அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
முன்னதாக அலைக்கற்றை ஏலத்திற்கான ஏலத் தொகை ஒரு லட்சத்து 9 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்தது.
செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய வைஷ்ணவ், ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்குள் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டை முடித்து, இந்த ஆண்டு செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்திற்குள் இந்தியாவில் 5G சேவைகளை தொடங்க அரசு திட்டமிடுவதாகவும் என்று கூறினார்.
Comments