2024ஆம் ஆண்டிற்கு பின் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து விலக ரஷ்யா முடிவு
2024ஆம் ஆண்டிற்கு பிறகு சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து ரஷ்யா விலக முடிவெடுத்துள்ளதாக அந்நாட்டு விண்வெளி ஆய்வு மையமான ரோஸ்கோஸ்மோஸ் அறிவித்துள்ளது.
உக்ரைனுடனான போர் காரணமாக ரஷ்யா மீது மேற்கு நாடுகள் பொருளாதார தடைகள் விதிக்கும் நிலையில், அந்நாடு இம்முடிவை எடுத்துள்ளது. கூட்டணி நாடுகளுக்கு அளித்த கடமைகளை முறையாக நிறைவேற்றுவோம் என அதிபர் புதினிடம் ரோஸ்கோஸ்மோஸ் தலைவர் யூரி போரிசோவ் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான், கனடா, ஐரோப்பிய நாடுகள் தற்போது சர்வதேச விண்வெளி நிலையத்தில் பங்களிப்பை வழங்கி வருகின்றன.
Comments