பாதுகாப்பு நிலைமை சரிசெய்யப்பட்டுள்ளதால் மீண்டும் ஆப்கானுக்கு திரும்பலாம், இந்து மற்றும் சீக்கியர்களுக்கு தலிபான்கள் அழைப்பு

0 2990

பாதுகாப்பு நிலைமை சரிசெய்யப்பட்டுள்ளதால் இந்துக்கள் மற்றும் சீக்கியர்கள் ஆப்கானிஸ்தானுக்குத் திரும்ப வேண்டும் என்று தலிபான்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இந்து மற்றும் சீக்கிய தலைவர்களை ஆப்கானிஸ்தான் அமைச்சர் முல்லா அப்துல் வாசி சந்தித்து பேசினார். இந்த சந்திப்புக்கு பிறகு பேசிய அவர், பாதுகாப்புப் பிரச்சினை சரிசெய்யப்பட்டுள்ளதால் நாட்டை விட்டு வெளியேறிய அனைத்து இந்து மற்றும் சீக்கியர்கள் மீண்டும் ஆப்கானிஸ்தானுக்கு திரும்பலாம் என தெரிவித்தார்.

இதற்கிடையே பயங்கரவாத தாக்குதலால் சேதமடைந்த காபூலில் உள்ள குருத்வாராவை புதுப்பிக்க ஆப்கானிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments