தோல் தடிமனாகும் நோயால் குஜராத்தில் 1000 கால்நடைகள் உயிரிழப்பு
தோல் தடிமனாகும் நோயால் குஜராத் மாநிலத்தில் மட்டும் சுமார் 1000 கால்நடைகள் உயிரிழந்திருப்பதாகவும், 33 ஆயிரம் கால்நடைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொசுக்கள், ஈக்கள்,பேன்கள், குளவிகள் மற்றும் மாசுப்பட்ட உணவு, நீரால் இந்த தோல் தடிமன் நோய் கால்நடைகளுக்கு பரவுவதாக கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்ட கால்நடைகளை தனிப்படுத்தி, தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகளும் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
Comments