வால்மார்ட் நிறுவனத்தின் விற்பனை பெருமளவு சரிவு

0 3511

அமெரிக்கர்களின் சிக்கன நடவடிக்கையால், 16 லட்சம் பேர் வேலை செய்து வரும் அமெரிக்காவின் மிகப்பெரிய சில்லரை விற்பனை நிறுவனமான வால்மார்டின் வர்த்தகம் பெருமளவு குறைந்துள்ளது.

பணவீக்கம் காரணமாக புதிய ஆடைகளை வாங்குவதை தவிர்க்கும் அமெரிக்கர்கள் உணவுப் பொருட்களை வாங்குவதற்கே அதிகமாக செலவிடுகின்றனர்.

இதனால், அமெரிக்காவின் சில்லரை வர்த்தகத்தில் 10 சதவிகித பங்களிப்பை அளித்து வரும் வால்மார்ட் நிறுவனத்தில் ஏப்ரல் மாத இறுதியில் 61 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு சரக்கு தேக்கமடைந்தது. மேலும் அதன் பங்கு மதிப்பும் 10 சதவிகிதம் குறைந்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments