தனுஷ்கோடியில் இருந்து ஹோவர் கிராப்ட் ரோந்து படகில் பாம்பனுக்கு கொண்டு செல்லப்பட்ட ஜோதி

0 2147

44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஜோதி தொடர் ஓட்டம் நடைபெறுகிறது.

ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி அரிச்சல்முனையில் இருந்து தொடங்கிய ஜோதியை, கடலோர காவல்படை வீரர்கள் ஹோவர் கிராப்ட் ரோந்து படகில் கடல் வழியாக கொண்டு வந்து, பாம்பனில் விளையாட்டு வீரர்களிடம் ஒப்படைத்தனர்.

இதே போல, மதுரையில் இருந்து நெல்லை வந்தடைந்த ஜோதி ஓட்டத்தை பாளையங்கோட்டை வ.உ.சி மைதானத்தில், சபாநாயகர் அப்பாவு தொடக்கி வைத்தார். இன்று மாலை ஒலிம்பியாட் ஜோதிகள் சென்னைக்கு கொண்டு செல்லப்பட உள்ளன.

இதனிடையே சிவகங்கை அரண்மனை வாயில் முன்பு நடைபெற்ற மினி மாரத்தான் போட்டியை அமைச்சர் கே.ஆர் பெரிய கருப்பன் தொடக்கி வைத்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments