காமன்வெல்த் போட்டியில் மனரீதியிலான துன்புறுத்தல் நடப்பதாக இந்திய வீராங்கனை புகார்
லண்டன் காமன்வெல்த் போட்டியில் மனரீதியாக துன்புறுத்தல் என இந்திய குத்துச்சண்டை வீராங்கனை லவ்லினா போர்க்கோஹைன் குற்றம் சாட்டி உள்ளார்.
காமன்வெல்த் கிராமத்தில் இருந்து தன்னுடைய பயிற்சியாளர் வெளியேற்றப்பட்டு விட்டதாக லவ்லினா டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.பயிற்சியாளர் வெளியேற்றப்பட்டதால் போட்டி தொடங்கும் 8 நாட்களுக்கு முன்பே பயிற்சி நின்று விட்டது என்றும், மற்றொரு பயிற்சியாளர் மீண்டும் இந்தியாவிற்கு அனுப்பப்பட்டு விட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
லவ்லினா டோக்கியோ ஒலிம்பிக்கில் குத்துச்சண்டையில் வெண்கலப் பதக்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments