4 வயது குழந்தையை தண்ணீர் தொட்டியில் அமுக்கி கொலை செய்த குற்றவாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை..!
கன்னியாக்குமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே 4 வயது குழந்தையை தண்ணீர் தொட்டியில் அமுக்கி கொலை செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், குற்றவாளி அந்தோணிசாமிக்கு இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் ஐம்பதாயிரம் ரூபாய் அபராதம் விதித்து நாகர்கோவில் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
அங்குள்ள ஆரோக்கியபுரத்தை சேர்ந்த கெபின்ராஜுக்கும், அந்தோணிசாமிக்கும் பணம் கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட விரோதத்தால், கெபின்ராஜுவின் 4 வயது குழந்தை ரெய்னாவை அந்தோணிசாமி கடத்தி சென்று தண்ணீர் தொட்டியில் அமுக்கி கொலை செய்ததாக வழக்கு தொடரப்பட்டது.
2019 ஆம் ஆண்டு தொடரப்பட்ட இந்த வழக்கில் இன்று நாகர்கோவில் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
Comments