தனது 17 வயது மகளைக் கடத்தியவருக்கு எதிராகப் போக்சோ பிரிவில் வழக்குப் பதியவில்லை எனக் கூறி தந்தை மனு தாக்கல்

0 2277
தனது 17 வயது மகளைக் கடத்தியவருக்கு எதிராகப் போக்சோ பிரிவில் வழக்குப் பதியவில்லை எனக் கூறி தந்தை மனு தாக்கல்

கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் தனது 17 வயது மகளைக் கடத்தியவருக்கு எதிராகப் போக்சோ பிரிவில் வழக்குப் பதியவில்லை எனக் கூறி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அதில் மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தி வாக்குமூலம் பெறவில்லை என்றும், மருத்துவப் பரிசோதனை நடத்தவில்லை எனவும் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி, காவல்துறையின் செயல்பாடு குறித்து அதிருப்தி தெரிவித்ததுடன், போக்சோ விதிகளைப் பின்பற்றும்படி அனைத்துக் காவல்நிலையங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்ப டிஜிபிக்கு உத்தரவிட்டார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments