ஓஸ்லோவில், ஃப்ராக்நெர்கிலென் விரிகுடாவில் சிறிய படகுகளை நீருக்குள் கவிழ்த்த பனிக்கடல் யானை
நார்வே தலைநகர் ஓஸ்லோவில் உள்ள ஃப்ராக்நெர்கிலென் விரிகுடா நார்டிக் கடற்கரை அருகே சுற்றுலாப்பயணிகள் படகுசவாரி மேற்கொண்டிருந்த பகுதியில் பனிக்கடல் யானை ஒன்று நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சிறிய படகுகளை நீருக்குள் கவிழ்த்தது.
இதனால் சுற்றுலாப்பயணிகள் பலரும் அந்த பனிக்கடல் யானை தங்களது படகுகளையும் கவிழ்த்துவிடுமோ என அச்சத்திற்குள்ளாகினர். பொதுவாகவே படகுகளை கவிழ்ப்பதற்கு பெயர்போன பனிக்கடல் யானைகள் இதற்கு முன்பு வரை டென்மார்க், ஜெர்மனி, நெதர்லாந்து ஆகிய நாடுகளில் தென்பட்டுள்ளன.
இந்நிலையில் தற்போது நார்வேயில் சுமார் 700 கிலோ எடையுடைய பனிக்கடல் யானை தென்பட்டுள்ளது. இது அந்த விலங்கினத்தின் சொந்த வாழ்விடமான வட துருவப்பகுதிகளில் இருந்து வெகு தூரம் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments