மருத்துவக் கல்லூரியில் இடம் தருவதாகக் கூறிக் கோடிக்கணக்கில் பணம்பெற்றதாக திருவனந்தபுரம் CSI எம்எம் தேவாலயத்தில் சோதனை

0 2828
திருவனந்தபுரம் CSI எம்எம் தேவாலயத்தில் சோதனை

மருத்துவக் கல்லூரியில் இடம் தருவதாகக் கூறிக் கோடிக்கணக்கில் பணம்பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் திருவனந்தபுரத்தில் CSI எம்எம் தேவாலயத்தில் அமலாக்கத் துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

காரக்கோணம் சிஎஸ்ஐ மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் படிப்பு இடம் தருவதாகக் கூறிப் பலரிடம் கோடிக்கணக்கில் பணம் பெற்றதாகப் புகார்கள் வந்ததன் அடிப்படையில் இரண்டு காவல்நிலையங்களில் வழக்குகள் பதியப்பட்டுள்ளன.

இதன் அடிப்படையில் தென்னிந்திய திருச்சபை தென்கேரளத் திருமண்டலத்தின் தலைமையிடமான எம்எம் தேவாலயத்திலும், பேராயர் இல்லத்திலும் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

இதேபோல் தேவாலயத்தின் செயலாளர் பிரவீன், காரக்கோணம் சிஎஸ்ஐ மருத்துவக் கல்லூரி இயக்குநர் பென்னட் ஆபிரகாம் ஆகியோரின் வீடுகளிலும் சோதனை நடைபெற்று வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments