குடியரசுத் தலைவருக்குத் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து.!

0 2149

நாட்டின் 15ஆவது குடியரசுத் தலைவராகப் பதவியேற்றுள்ள திரவுபதி முர்முக்குத் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், குடியரசுத் தலைவராகத் திரவுபதி முர்மு தேர்ந்தெடுக்கப்பட்டது ஜனநாயகக் கொள்கையின் மீது நாட்டின் நம்பிக்கையையும் பலத்தையும் வெளிப்படுத்துவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

எடப்பாடி பழனிசாமி டுவிட்டரில் விடுத்துள்ள செய்தியில், அதிமுக சார்பிலும், தமிழக மக்களின் சார்பிலும் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments