திருவள்ளுரில் அரசு உதவி பெறும் பள்ளியில் 12ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை..!

0 33244
திருவள்ளுரில் அரசு உதவி பெறும் பள்ளியில் 12ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை..!

திருவள்ளுர் மாவட்டம் கீழச்சேரியில் மாணவி தற்கொலை செய்துக்கொண்ட வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.

அங்குள்ள அரசு உதவி பெறும் திருஇருதய பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் விடுதியில் தங்கி பிளஸ் டூ படித்து வந்த, திருத்தணியை அடுத்த தெக்களூர் கிராமத்தைச் சேர்ந்த 17 வயது மாணவி இன்று காலை தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இன்று காலை வழக்கம் போல் தனது சக தோழிகளுடன் பேசிக் கொண்டிருந்த அந்த மாணவி, சக மாணவிகள் உணவருந்த சென்ற பிறகு அறையில் உள்ள மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்துக்கொண்டதாக கூறப்படுகிறது.

மாணவியின் உடலை கைப்பற்றிய போலீசார் உடல்கூறாய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர்.இதனிடையே, மாணவியின் சொந்த ஊரான தெக்களூர் கிராமத்தில் மக்கள் அரசு பேருந்தை சிறைப்பிடித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல் கீழச்சேரி பள்ளி விடுதியின் முன்பும் மக்கள் போராட்டம் நடத்தினார்கள்.

மாணவியின் தற்கொலை குறித்து கோட்டாட்சியர், வட்டாட்சியர், காஞ்சிபுரம் சரக டிஐஜி சத்ய பிரியா, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விசாரணை நடத்தினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய காவல் கண்காணிப்பாளர் கல்யாண் இந்த வழக்கில் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்துவார்கள் என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments