ஹரிதுவாரில் கன்வார் யாத்திரைக்கு திரண்ட பல்லாயிரக்கணக்கானோர்... மலர் தூவி இஸ்லாமியர்கள் மரியாதை!
கொரோனா பரவல் காரணமாக 2 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்ட கன்வார் யாத்திரை மீண்டும் தொடங்கப்பட்டுள்ள நிலையில், யாத்திரையின் ஒரு பகுதியாக ஹரிதுவாரில் பல்லாயிரக்கணக்கானோர் திரண்டனர். அவர்கள் மீது மத நல்லிணக்கம் கொண்ட இஸ்லாமியர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
உத்தராகண்ட் மாநிலத்தில் ஆண்டுதோறும் ஜூலை முதல் ஆகஸ்ட் வரை கன்வார் யாத்திரை மேற்கொள்ளப்படுகிறது. இந்த யாத்திரை மேற்கொள்ளும் சிவ பக்தர்கள் கன்வாரியாக்கள் என்றழைக்கப்படுகின்றனர்.
ஹரித்வார் உள்ளிட்ட புனித தலங்களுக்குச் சென்று கங்கை நீரை எடுத்து வரும் பக்தர்கள் தங்கள் ஊர்களில் உள்ள ஆலயங்களில் உள்ள சிவனுக்கு அபிஷேகம் நடத்துவார்கள்.
Comments