பொழுதுப்போக்குத் துறையில் அதிக வரி செலுத்துபவர் என்ற பெருமையை மீண்டும் பெற்றார் பாலிவுட் நடிகர் அக்சய் குமார்!

0 2042

பிரபல பாலிவுட் நடிகர் அக்சய் குமார், பொழுதுப்போக்குத் துறையில் அதிக வரி செலுத்துபவர் என்ற பெருமையை மீண்டும் பெற்றுள்ளார். இதற்கான பாராட்டுச் சான்றிதழை வருமான வரித்துறை அவருக்கு வழங்கியுள்ளது.

கடந்த 5 ஆண்டுகளாக அதிக வரி செலுத்துபவர் என்ற பெருமையை அக்சய் குமார் தக்கவைத்துள்ளார். தற்போது இங்கிலாந்தில் படப்பிடிப்பில் உள்ளதால், வருமான வரித்துறையின் பாராட்டு சான்றிதழை அவரது தரப்பில் பெற்றுக் கொண்டதாக கூறப்படுகிறது.

இதே போன்று தமிழக - புதுச்சேரி மண்டலத்தில் அதிக வருமான வரி செலுத்தியதற்காக நடிகர் ரஜினிகாந்திற்கு அறிவிக்கப்பட்ட விருதை அவரது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பெற்றுக் கொண்டார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments