ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட பார்த்தா சட்டர்ஜியை விமான ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் செல்ல ஏற்பாடு!

0 1737

ஆசிரியர் பணி நியமன ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட மேற்குவங்க அமைச்சர் பார்த்தா சட்டர்ஜிக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதால் விமான ஆம்புலன்ஸ் மூலம் புவனேசுவரில் உள்ள ஏய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்க கொல்கத்தா உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

அவருடன் தற்போது அவருக்கு சிகிச்சையளித்து வரும் மருத்துவரும் வழக்கறிஞரும் விமானத்தில் உடன் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.

பார்த்தா சட்டர்ஜியின் கூட்டாளியான நடிகை ஆர்பிதாவிடமிருந்து 21 கோடியே 90 லட்சம் ரூபாய் குவியலான ரொக்கப்பணம் கைப்பற்றப்பட்டதையடுத்து ஆர்பிதாவை கைது செய்த அமலாக்கத் துறை அதிகாரிகள் தொடர்ந்து அமைச்சரிடம் 20 மணி நேரம் விசாரணை நடத்தி அவரையும் கைது செய்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments