தென் ஜப்பானில் எரிமலை வெடித்து வெளியேறி வரும் தீப்பிழம்புகள்.. பாதுகாப்பான இடங்களுக்கு மக்கள் வெளியேற வலியுறுத்தல்!
தெற்கு ஜப்பான் ககோஷிமாவில் உள்ள சகுராஜிமா ((Sakurajima)) எரிமலை வெடித்து தீப்பிழம்புகள் வெளியேறி வருவதால், அப்பகுதியில் வசிக்கும் மக்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறுவுறுத்தப்பட்டுள்ளனர்.
எரிமலையில் இருந்து வெளியேறிய புகையானது வான்பரப்பில் 300 மீட்டர் வரை விரிந்துள்ளதாக ஜப்பான் வானிலை ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
சேத விபரங்கள் குறித்து தகவல்கள் எதுவும் வெளியாகாத நிலையில், 3 கி.மீ. தொலைவில் உள்ள குடியிருப்பு வாசிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அறுவுறுத்தப்பட்டனர்.
Comments