அகதிகளை ஏற்றிச் சென்ற படகு கடலில் கவிழ்ந்ததில் 17 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு.!
ஹைதியில் இருந்து அமெரிக்கா நோக்கி அகதிகளை ஏற்றிச் சென்ற படகு கடலில் கவிழ்ந்ததில் ஒரு குழந்தை உட்பட 17 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
ஹைதி நாட்டில் வறுமையும், வன்முறையும் அதிகரித்ததால் ஏராளமானோர் அமெரிக்காவில் தஞ்சமடைய ஆபத்தான கடற்பயணங்களை மேற்கொண்டு வருகின்றனர். அவ்வாறு அகதிகளை ஏற்றி சென்ற படகு நியூ பிராவிடன்ஸ் தீவில் இருந்து 11கி.மீ தொலைவில் கடலில் கவிழ்ந்தது.
60 பேர் வரை படகில் பயணம் செய்த நிலையில் 25 பேர் பேர் உயிருடனும், 17 பேர் சடலமாகவும் மீட்கப்பட்டுள்ளனர். கடலில் மாயமானவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
Comments