மின் கட்டணம் செலுத்தச்சொல்லி அனுப்பப்பட்ட 'லிங்'ஐ கிளிக் செய்த மூதாட்டியின் வங்கி கணக்கில் இருந்து ரூ.4.24 லட்சம் திருட்டு..!
கோயம்புத்தூரில், கிருஷ்ணம்மாள் என்ற 70 வயது மூதாட்டியின் செல்போனுக்கு, உடனடியாக மின் கட்டணம் செலுத்தாவிட்டால் இரவுக்குள் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுவிடும் என SMS வந்துள்ளது.
அந்த எண்ணைத் தொடர்புகொண்ட மூதாட்டி அவர்கள் கூறியபடியே செல்போனுக்கு அனுப்பப்பட்ட லிங்கை கிளிக் செய்து 10 ரூபாய் செலுத்தியுள்ளார்.
அடுத்த சில நிமிடங்களில் மூதாட்டியின் வங்கி கணக்கில் இருந்து 4 கட்டங்களாக 4.25 லட்ச ரூபாய் எடுக்கப்பட்டதாக SMS வந்துள்ளது.
மின் கட்டணம் செலுத்தவில்லை என்றோ, வங்கியில் இருந்து பேசுவதாக கூறியோ அனுப்பப்படும் லிங்-களை கிளிக் செய்ய வேண்டாம் என போலீசார் எச்சரித்துள்ளனர்.
Comments