ராம்நாத் கோவிந்த் இன்று நாட்டு மக்களுக்கு உரை.!
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று இரவு நாட்டு மக்களிடையே உரையாற்றுகிறார். இன்றுடன் அவரது பதவிக் காலம் முடிவடைகிறது.
இதையடுத்து இரவு 7 மணிக்கு நாட்டு மக்களிடையே உரையாற்ற உள்ளதாக ராஷ்ட்ரபதி பவன் அறிக்கை வெளியிட்டுள்ளது. கடந்த ஐந்து ஆண்டு கால பதவிக் காலத்தில் கடந்த வந்த பாதை, வகித்த பொறுப்புகள் குறித்து உரை நிகழ்த்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
குடியரசுத் தலைவரின் உரை தூர்தர்ஷன் மற்றும் வானொலியில் ஒளிபரப்ப உள்ளதாகவும், மாநில மொழிகளுக்கு ஏற்ப உரை ஒளிபரப்பாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments